search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேட்புமனு தாக்கல்"

    தமிழக சட்டசபையில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். #AIADMKcandidates #TNassembly #TNassemblybypoll
    சென்னை:

    தமிழ்நாட்டில் கடந்த 18-ம் தேதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுடன் நடந்து முடிந்த 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் தவிர காலியாக உள்ள அரவக்குறிச்சி,  திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய  4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.

    ஓட்டப்பிடாரம் தொகுதியில் மோகன் வேட்புமனு தாக்கல்

    வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடையும் நிலையில் இந்த நான்கு தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
     
    அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்நாதன், திருப்பரங்குன்றம் தொகுதியில் முனியாண்டி, ஓட்டப்பிடாரம் தொகுதியில் மோகன் மற்றும் சூலூர் தொகுதியில் கந்தசாமி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். #AIADMKcandidates #TNassembly #TNassemblybypoll
    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் 2-வது முறையாக போட்டியிடும் பிரதமர் மோடி வருகிற 26-ந்தேதி வேட்பு மனுதாக்கல் செய்ய உள்ளார். #LoksabhaElections2019 #PMModi
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் மே 19-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. அந்த தொகுதியில் பிரதமர் மோடி வருகிற 26-ந்தேதி வேட்புமனுதாக்கல் செய்ய உள்ளார். இது குறித்து பா.ஜனதா வட்டாரங்கள் கூறியதாவது:-

    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 2-வது முறையாக போட்டியிடுகிறார். அவர் வருகிற 26-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக அவர் 25-ந்தேதி வாரணாசி செல்கிறார்.

    அன்று பிரமாண்ட பேரணி நடைபெற உள்ளது. பேரணியில் பிரதமர் மோடி சாலை வழியாக சென்று மக்களை சந்தித்து தேர்தல் பிரசாரம் செய்கிறார். இந்த பேரணியில் பா.ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

    மேலும் பா.ஜனதா கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் பேரணியில் கலந்து கொள்கிறார்கள்.

    26-ந்தேதி காலையில் காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்து விட்டு பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இது குறித்து பா.ஜனதா செய்தி தொடர்பாளர் நவின் கோலி கூறுகையில், “பிரதமர் மோடியை வரவேற்பதை வாரணாசி மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்” என்றார். #LoksabhaElections2019 #PMModi
    வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு ஒருநாள் முன்பு அதாவது 25-ந்தேதி மோடி அங்கு பிரமாண்ட பேரணி நடத்துகிறார். #Loksabhaelections2019 #PMModi #Varanasi
    வாரணாசி:

    பிரதமர் நரேந்திரமோடி கடந்த பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி, குஜராத் மாநிலம் வதோதரா ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார்.

    இதில் இரண்டிலும் வெற்றி பெற்றார். பின்னர் வதோதரா தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

    இந்த தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 2-வது முறையாக போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் கடைசி கட்டமாக மே 19-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது.

    இந்த நிலையில் வாரணாசி தொகுதியில் மோடி வருகிற 26-ந்தேதி மனு தாக்கல் செய்கிறார்.

    வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு ஒருநாள் முன்பு அதாவது 25-ந்தேதி மோடி வாரணாசியில் பிரமாண்ட பேரணி நடத்துகிறார். அவர் வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.

    வாரணாசியில் உள்ள லங்காசிராசிலுவில் இருந்து தஷாவாடூத் வரை மோடி பேரணியாக சென்று பிரசாரம் செய்கிறார். இதில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட மத்திய மந்திரிகள், உ.பி.மாநில மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள்.

    26-ந்தேதி காலையில் காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்த பிறகு மோடி மனு தாக்கல் செய்கிறார். #Loksabhaelections2019 #PMModi #Varanasi
    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளில் பாராளுமன்ற தேர்தலுக்கு 20 பேரும், சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு 2 பேரும் மனுதாக்கல் செய்தனர். #LSPolls #SatyabrataSahoo
    சென்னை:

    வடசென்னை பாராளுமன்ற தொகுதியில் பீப்பிள்ஸ் பார்ட்டி ஆப் இந்தியா (மதச்சார்பற்றது), சுயேச்சை சார்பில் தலா ஒரு மனு, சோசலிஸ்டு யுனிட்டி சென்டர் ஆப் இந்தியா (கம்யூனிஸ்டு) சார்பில் 2 மனுக்கள் என மொத்தம் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    தென்சென்னையில் சோசலிஸ்டு யுனிட்டி சென்டர் ஆப் இந்தியா (கம்யூனிஸ்டு) சார்பில் 2 மனுக்கள், ஒரு சுயேச்சை என 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.



    நாமக்கலில் அகிம்சா சோசலிஸ்டு கட்சி, மதுரையில் ரா‌‌ஷ்டிரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தலா ஒரு வேட்புமனு தாக்கல் செய்துள்ளன. தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம், கோவை, பொள்ளாச்சி, தேனி, நெல்லை ஆகிய தொகுதிகளில் சுயேச்சைகள் தலா ஒரு வேட்புமனுவும், ராமநாதபுரம், திருப்பூரில் தலா 2 வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் பாராளுமன்ற தொகுதிகளுக்காக 20 வேட்புமனுக்கள், முதல் நாளான நேற்று தாக்கல் செய்யப்பட்டன.

    சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக பெரம்பூர், திருவாரூரில் தலா ஒரு சுயேச்சை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர். இத்தகவலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். #LSPolls #SatyabrataSahoo

    தமிழகத்தில் பாராளுமன்ற மற்றும் சட்டசபை இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. வருகிற 26-ந் தேதி வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். #ParliamentElections #TamilnaduByElection #Nomination
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அந்த தேர்தலோடு சேர்த்து தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.



    இந்த தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஓர் அணியாகவும், தி.மு.க. கூட்டணி கட்சிகள் மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. அ.ம.மு.க., நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. முக்கிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. வேட்பாளர்களுக்கு தேர்தல் கமிஷன் கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

    இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். வரும் 26-ம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.

    முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற வகையில் வேட்புமனு பெறப்படுகிறது. வேட்புமனுவை பெறுவதற்கான விதிமுறைகள் அடங்கிய புத்தகங்கள், அந்தந்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன.  வேட்புமனு தாக்கல் செய்ய வரும் நபருடன் 4 பேர் மட்டுமே அலுவலக அறைக்குள் வர வேண்டும். அதுபோல் அதிகபட்சம் அலுவலக வளாகத்துக்குள் 3 கார்கள் மட்டுமே வேட்பாளருடன் வரலாம். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் (23 மற்றும் 24-ந் தேதிகளில்) விடுமுறை என்பதால் வேட்புமனுக்கள் பெறப்படாது.  #ParliamentElections #TamilnaduByElection #Nomination

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய 26-ந் தேதி கடைசி நாள் ஆகும். #LokSabhaElection #Tamilnadu
    சென்னை:

    இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ந் தேதி நடக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 18-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தமட்டில் ஒரே கட்டமாக நடத்தப்பட உள்ள இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய 26-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

    தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளை தவிர்த்து மீதமுள்ள 18 தொகுதிகளுக்கான தேர்தலும் பாராளுமன்ற தேர்தலுக்கான அட்டவணைப்படியே ஏப்ரல் 18-ந் தேதி நடக்க உள்ளது. அந்த தொகுதிகளுக்கும் நாளை வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னையை பொறுத்தமட்டில் வடசென்னை தொகுதிக்கு சென்னை மாநகராட்சியின் வடக்கு வட்டார துணை ஆணையாளர் திவ்யதர்ஷினியும், தென்சென்னை தொகுதிக்கு தெற்கு வட்டார துணை ஆணையாளர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசும், மத்திய சென்னை தொகுதிக்கு மத்திய வட்டார துணை ஆணையாளர் பி.என்.ஸ்ரீதரும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொகுதிகளில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கென தனியாக உதவி தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    வடசென்னை தொகுதிக்கு பழைய வண்ணாரப்பேட்டை பேசின் பாலம் சாலையில் உள்ள மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்திலும், தென்சென்னை தொகுதிக்கு அடையாறு டாக்டர் முத்துலட்சுமி சாலையில் உள்ள தெற்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்திலும், மத்திய சென்னை தொகுதிக்கு செனாய்நகர் புல்லா அவென்யூ, 2-வது குறுக்கு தெருவில் உள்ள மத்திய வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்திலும் வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது.

    பெரம்பூர் சட்டமன்ற தொகுதியை பொறுத்தமட்டில் சென்னை மாவட்ட வருவாய் அதிகாரி கருணாகரன் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். வியாசர்பாடி சர்மாநகர் 2-வது பிரதான சாலையில் உள்ள மாநகராட்சி கட்டிடத்தில் வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது. வேட்புமனுக்கள் பெறப்படும் இடங்களில் உள்ளூர் போலீசாருடன் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. 
    தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் ரூ.22 கோடி சொத்து உள்ளதாக தனது வேட்புமனு தாக்கலில் தெரிவித்து உள்ளார். #ChandrasekharRao
    நகரி:

    தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் வருகிற டிசம்பர் 7-ந்தேதி நடக்கிறது.

    இதில் ஆட்சியை மீண்டும் தக்க வைக்க சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி தீவிரமாக உள்ளது.

    முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் கெஜ்லால் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதில் சந்திரசேகரராவ் தனது சொத்து கணக்குகளை தெரிவித்து உள்ளார்.

    அவருக்கு ரூ.22 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. தான் விவசாய தொழில் செய்து வருவதாகவும், ஆண்டு வருமானம் ரூ.31.5 லட்சம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    விவசாய தொழிலில் ரூ.3.2 கோடியை முதலீடு செய்து உள்ளதாகவும், பண்ணை வீடுகள் மதிப்பு ரூ.6.5 கோடி என்றும் தெரிவித்துள்ளார். ரொக்கமாக ரூ.1.3 கோடி இருப்பதாக கூறி உள்ளார்.

    மேலும் அவர் தனியார் கம்பெனிகளிலும் முதலீடு செய்துள்ளார்.

    சந்திரசேகரராவ் தனக்கு சொந்தமாக கார் இல்லை என்று வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். அவரது கட்சியின் சின்னம் கார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சந்திரசேகரராவுக்கு சொந்தமாக கார் இல்லை என்பது சுவாரசியமாக பார்க்கப்படுகிறது.

    அவரிடம் கார் இல்லாமல் இருந்தாலும் அவரது பாதுகாப்புக்காக அரசு சார்பில் சொகுசு கார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

    சந்திரசேகரராவ் ரூ.2.4 லட்சத்துக்கு நகைகள் வைத்துள்ளார். அவரது மனைவிக்கு ரூ.96 லட்சம் மதிப்பில் நகை இருக்கிறது. அவரது மகன் கே.டி.ராமராவ் ரூ.84 லட்சமும், மருமகள் ‌ஷலிமா ரூ.24 லட்சமும் ரொக்கம் வைத்துள்ளனர்.

    கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் வேட்புமனுவை தாக்கல் செய்த சந்திரசேகர ராவ் ரூ.15 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்து இருந்தார். தற்போது 4 வருடத்தில் அவரது சொத்து மதிப்பு ரூ.7 கோடி உயர்ந்துள்ளது.

    இதேபோல் 2014-ம் ஆண்டு 37 ஏக்கர் நிலம் இருந்ததாக தெரிவித்து இருந்தார். தற்போது 54 ஏக்கர் விவசாய நிலம் வைத்திருக்கிறார். #ChandrasekharRao
    புதுவை மாநில இளைஞர் காங்கிரசுக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஆகஸ்டு 11, 12 ஆகிய தேதிகளில் நடக்கிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. #congress

    புதுச்சேரி:

    புதுவை மாநில இளைஞர் காங்கிரசுக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஆகஸ்டு 11, 12 ஆகிய தேதிகளில் நடக்கிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இதற்காக காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் தனியாக அறை ஒதுக்கப்பட்டிருந்தது. தேர்தல் அதிகாரியாக ரித்திஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இன்று முதல் வருகிற ஆகஸ்டு 2-ந்தேதி வரை வேட்புமனுவை தாக்கல் செய்யலாம். காலை 10 மணி முதல் 5 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படுகிறது.

    இளைஞர் காங்கிரசின் தலைவர், பொதுச் செயலாளர் ஆகிய பதவிகளுக்கு வேட்பு மனுவோடு ரூ.7 ஆயிரத்து 500 வரைவோலையும் இணைக்கப்பட வேண்டும். பெண்களுக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் ரூ.4 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தொகுதியளவில் தலைவர், துணைத்தலைவர், 13 செயலாளர்கள் என தொகுதிக்கு 15 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இவர்களுக்கு ரூ.ஆயிரத்து 500 வரைவோலை இணைக்க வேண்டும். பெண்கள், தாழ்த்தப்பட்டோர் ரூ.ஆயிரம் வரைவோலை இணைக்க வேண்டும்.

    மாநில தலைவர் பதவிக்கு அகில இந்திய தலைமை நேர்முக தேர்வு நடத்தினர். இதில் 13 பேர் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் போட்டியிட அகில இந்திய தலைமை அனுமதி வழங்கியுள்ளது. இதில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுபவர் தலைவராகவும், அடுத்தடுத்த 4 பேர் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்படுவர். பொதுச் செயலாளர் பதவிக்கு தனியாக வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்.

    தலைவர் பதவிக்கு போட்டியிட கட்சித் தலைமை அனுமதி அளித்துள்ளவர்களின் பட்டியல் வருமாறு: 1.அசோக்ராஜா, 2.வசந்தராஜா, 3.லட்சுமி காந்தன், 4.ரமேஷ், 5.வேல் முருகன், 6.ஜெயராமன், 7.ரகுபதி, 8.ஜெய்னா, 9.கார்த்திக், 10.ஜெயதீபன், 11.பிரியா, 12.ஆனந்தபாபு, 13.காளிமுத்து. #congress

    ×